ஆசிரியர் உரை
எனதருமை மருது சொந்தங்களுக்கு வணக்கம் !
வரலாற்று நெடுகிலும் எளிய மனிதர்களாக இருந்து ஆங்கிலேயே ஏகாதிபத்தியதை எதிர்த்து நின்று வென்ற பெருமைக்குரியவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள்.
ஆற்காடு நாவப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனி படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாக சிவகங்கை மீது போர் தொடுத்தார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையர் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்கு தப்பிட்ச் சென்றனர்.
1772 இறுகுப் பிறகு காட்டில் மறைந்து வாழ்த்த மருது சகோத்திரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமாத்தினர். இந்த போர் சோழவந்தானில் தொடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைப்பெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு போர் வெற்றி பெற்றது.
இத்தகைய தடம் பாதித்த மருதுபாண்டியர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதோடு, அதன் வழி சமூகப்பணியையும் முன்னிறுத்து போவது தான் எங்கள் மருது பேரவை மாத இதழின் நோக்கமே, மருது சகோதரர்களின் ஆட்சி, மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிட்டதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கு வெளிப்பாடு இடங்களை அமைத்து கொடுத்தனர்.
இவர்கள் காளையர் கோவில் கோபுரத்தைக் காட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோவில்களுக்கும் திருப்பணி செய்தனர். சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜாம்புத் தீவு பிரகடனம்” இன்று வரை வரலாற்று ஆவணம்.
இத்தகைய பெருமைமிகு தியாக வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது தான் மருது பேரவையின் நோக்கமாகும். ஆதலால் நம் சொந்தங்களின் பங்களிப்போடு சமூக இயக்கமாக முன்னெடுக்க உள்ளோம். இனைந்து செயல்படுவோம் எனதருமை சொந்தங்களே…
மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு
மருதுபாண்டியர் நல அறக்கட்டளை ( பதிவு எண் 40/2002)அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் சென்னை எழும்பூர் (பதிவு எண் 75/1958)இணைந்து நடத்தும் மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை தமிழ் நாடு அரசுப்பணி (TNPC) குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி...
அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணம்
அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணத்திற்க்கு ஒன்றிணையுங்கள். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அழைக்கின்றார் ராஜ்குமார். தமிழ்நாடு அகமுடையார் அனைத்து...
கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழ்
கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழை திருப்பூர், கோவை, தாராபுரம், ஈரோடு, மதுரை, சென்னை மாவட்டம் உறவினர்களுக்கு, நிர்வாகிகளுக்கு...
ம…கோ.. .ரா… மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்…
M..arudhurG..opalamenanR..amachandran என்ற திரு.MGR அவர்களின் 108" வது பிறந்த தினம் இன்று ..! 17-01-….1917. 🔰சிவகங்கையில் 'மாமன்னர் மருது பாண்டியர் நகர்'(மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்)…… 🔰 "மருது பாண்டியர்" பெயரில்"போக்குவரத்துகழகம்" உருவாக்கிய வர்……...
புதுக்கோட்டை மாவட்டம்(14 -01-1974) உதயமான நாள்..!
"Pudukkottai District Day". 🔸மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் (His Highness) தொண்டைமான் மன்னர்கள்புதிய கோட்டை கொத்தளங் களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று… 🔹'தனி நாணயம்',...
வாடிக்கையாளர்களே ! வியாபாரிகளே ! எங்களது மாதஇதழில் விளம்பரம் செய்து பயனடையுங்கள் .