வராதீர்கள் என்று சொல்ல எனக்கு உரிமைஇல்லை!! இனி வந்து என்ன பயன் என்று வருகை தருகிறீர்கள் என்பதை விளக்கினால் இந்த பாவப்பட்ட இராசகுலத்துஅகம்படிய பய கூட்டத்துக்கு சற்று மனம் இளைப்பாறும்….

மாண்பு மிகு என்று கூறுவதற்கு அர்த்தம் மாண்பை அறிந்து நடக்கும் மதிப்புமிக்க நபர் என்று தானே பொருள்…

இங்கு மாண்பை அறிந்து நடக்கும் விதமாக அக்டோபர் 24 முதல் 27 வரை என்ன நடந்தது என்பதை எனக்கு நாளை தேவர்திருமகனார் குருபூஜைக்கு வந்து வரும் வழியில் மாமன்னர் மருதிருவர் சிலைக்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் பதிலளித்தால் இந்த காட்டுபய கூட்டம் தெரிந்து கொள்வோம்..

222 வருடம் முன்னே இந்த நாட்டிற்காக தன் வாரிசுகளுடன் சேர்த்து உயிர் தியாகம் செய்து இந்த நாட்டை ஆண்ட மாமன்னர்கள் சிலை 30 ம் தேதி தான் மதுரைக்குள் தென்படுமா ??

24 முதல் 27 வரை மாமன்னர்கள் சிலை தெப்பகுளத்தில் காணப்படவில்லையா? அல்லது 24_ 27 தேதியில் அந்த சிலையில் கூட அவர்களின் வீரம் வெளிப்பட்டு விடும் என அஞ்சி பயந்து மரியாதை செய்ய முன்வரவில்லையா??

புரியாமல் கோவப்படும் கூட்டம் இல்லை இந்த இராசகுல அகம்படிய கூட்டம்.. புரிந்துகொண்டதால் மட்டுமே வாள்தூக்க கூட தயங்காத மூர்க்கதனமான கூட்டம் இந்த அகம்படிய பய கூட்டம்..

மாமதுரை சீமையில் வேரூன்றி நிற்கும் இந்த இராசகுலத்து கூட்டத்தின் பிரதிநிதியாக ஆண்டாண்டு காலமாக நாங்க வணங்கி தெய்வங்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள்…

உயிர் தியாகம் சொத்து தியாகம் வாரிசுகள் இழப்பு என அனைத்தையும் துறந்து வெள்ளையனை எதிர்த்து தூக்கு மேடை ஏற்ற எம் மன்னவருக்கு உங்கள் 200 ரூபாய் மாலை என்ன மன ஆறுதலை தந்து விட போகிறது என்று மாலை மரியாதை செய்ய நாளை அங்கு வருகை தருகிறீர்கள்???

முதல்வர் எதிர்கட்சி தலைவர் என நாளை படையெடுக்கும் சான்றோர்களே!! நீங்கள் இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் அன்று எம் மன்னவன் போட்ட விதை!!!

அது முளைத்து பின்னர் அடக்குமுறைகளை சரிசெய்ய எவ்வளவோ தலைவர்கள் உருவாகியிருக்காலாம்…

ஆனா விதை மருதுபாண்டியர் போட்டது!!

அப்படியான தெய்வங்களை அவர்களின் பிள்ளைகளான அகம்படியார் கூட்டங்கள் தமிழகமெங்கும் வணங்கி வந்தது அன்றைய பொழுது எங்க சென்றீர்கள்??

எலக்காரமாக நினைக்கும் உங்களின் இன்றைய மெத்தனம்,, ஓட்டு வங்கியின் போது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறதே எதனால்???

உங்களுக்கு இந்த தமிழ்நாட்டை சீரமைக்கவே நேரம் பற்றவதில்லை… இதில் எதுக்கு மெத்தசிரமப்பட்டு தெப்பகுளம் வர வேண்டும்…

தேவையில்லாத நேரச்செலவுதான் உங்களுக்கு…அதனால் தாங்கள் அங்கு தெப்பக்குளம் வருவதை தவிர்த்து விட்டு நாளை யாருக்கு குருபூஜையோ அங்கு மட்டும் சென்றுவிட்டு உங்கள் அடுத்த பணியை துவங்கிலாமே…

எங்கள் பிரிவினையின் அடித்தளமும் நீங்களே!!!

எனவே மன்னர் மருதுபாண்டியர் தெப்பக்குளம் கோவிலுக்கு தாங்கள் செல்லவதை தவிர்த்து விடுங்கள்…..

இவண்:
ப.
சாஸ்தாபிரசாத்சேர்வை அரண்மனையார்.MBA

மாமன்னர்பெரியமருதுபாண்டியர்
நேரடி வாரிசுதாரர்.

முத்தூர் அரண்மனை ஜெமீன்.

நரிக்குடி முக்குளம்…