ஆளுகின்ற கட்சிகளுக்கு அவர்களை சுதந்திரமாக ஆளச் செய்த மருது பாண்டியர்களின் நினைவு அக்டோபர் 27 ஆம் தேதி வராமல் 30 ஆம் தேதி ஏன் வருகிறது?மருதுபாண்டியர் களுக்கு தனியே அரசு விழா நடத்துவதில் ஆட்சியாளர்களுக்கு ஏன் தயக்கம் ? 

முக்குலத்தோரில் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு அதில் லாபம் காண நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.சாதி வாரி கணக்கெடுப்பை முறையாக நடத்தினால் யார் பெரும்பான்மை என்பது வெட்ட வெளிச்சமாகும்.

1. சிவகங்கை சீமையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும்…

2. காளையார் கோவில் நினைவிடத்தில் இருக்கிற மருதுபாண்டியரின் சிலையை பராமரிப்பு செய்து, இருவரின் சிலைகளையும் நிறுவிட வேண்டும்…

3. சங்கரபதி கோட்டையை புனரமைப்புச் செய்து பாதுகாத்திட வேண்டும்…

4. திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடன நினைவுத்தூண் எழுப்ப வேண்டும்…

5. நரிக்குடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்

6. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்….

7.புதிய பாராளுமன்ற வளாகத்தில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க வேண்டும்…

8.காளையார் கோவில் முகப்பில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவாக நினைவு வளைவு அமைக்க வேண்டும்

9. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சேர்வைக்காரர் மண்டகப்படியை முறைப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும் 

10. தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியில்  பொதுவுடைமைப் போராளி இரணியனுக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்க வேண்டும்….

எனப்பல தரப்பட்ட கோரிக்கைகள் சமுதாய உணர்வாளர்களால் 

தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் 

எந்த கோரிக்கைக்கும் செவிமடுக்காத ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் என்பதை மருது பேரவை வலியுறுத்துகிறது.