
சென்னையில் மருது பேரவை நிறுவனர் தலைவர் சமயச்செல்வம் ,மாநில பொதுச்செயலாளர் குரூஸ் முத்து பிரின்ஸ்,மருது பேரவை மாத இதழ் செய்தி ஆசிரியர் ஜான் சுந்தர ராஜா மற்றும் மருது பேரவை நிர்வாகிகள் பிச்சை பாண்டி வீரகுமார் நரிக்குடி கண்ணன் ஆகியோர் அமைச்சர் பெருமக்கள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கை குழு,தலைமைக்கழக நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர்.
அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில்,
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு வெண்கல சிலை அரசு சார்பாக அமைக்க வேண்டியும்,
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குளத்தில் அரசு சார்பாக மணி மண்டபம் அமைத்திட வேண்டியும்,மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த இடத்திற்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வாழ்ந்த ஊர் என்று நுழைவு வாயிலில் ஆர்ச் வைத்திட வேண்டியும்,
திருப்பத்தூர், காளையார்கோவிலில் அக்டோபர் 24-ம் தேதி மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு அரசு விழா நடத்துவது போல் அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடி முக்குளத்தில் நடத்திட வேண்டி தங்கள் மேலான பார்வைக்கு கோரிக்கை வைக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு செல்வதற்காக முதலில் திமுக தலைமைக் கழக செயலாளரும் நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன் அவர்களை அவர்களது இல்லத்தில் மருது பேரவை நிர்வாகிகள் சந்தித்தனர்.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை சந்தித்து பேரவை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்


தொடர்ந்து மாண்புமிகு தொழில் முதலீட்டு துறை மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்களை சந்தித்து மருது பேரவை கோரிக்கைகள் குறித்து பேசினர்.


தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வளாகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோரை சந்தித்து மருது பேரவை நிர்வாகிகள் தமது கோரிக்கை மனுவினை அளித்து உரையாற்றினர்.


இதனிடையே நடிகர் ராஜேஷ் அவர்களை சந்தித்த மருது பேரவை நிர்வாகிகள் மருது பேரவை மாத இதழை அவரிடம் அளித்த போது மகிழ்வோடு பெற்றுக்கொண்ட அவர் வரலாற்று ரீதியான தகவல்களை மறந்து போய்விட்டோம் என்று வேதனையோடு குறிப்பிட்டதோடு பெருமைக்குரிய மருது சகோதரர்கள் வரலாறு குறித்து தான் பேசிய நீண்ட உரை இணையத்தில் இருப்பதாகவும் அதனை கேட்டு பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.




