
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் அந்த பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நண்பனையும், நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க 65 ஆங்கிலேய இராணுவ தளபதிகளை போர்களத்தில் எதிர்த்து நின்ற வீர வேங்கைகளின் வீரத்தை எழுதி மாளாது…!!!
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையனுக்கு எதிரான முதல் போர் பிரகடனம் ”ஜம்பு தீவு பிரகடனம்” வெளியிட்டு எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்த முதல் வீரத்தமிழன் மாமன்னர் சின்ன மருது பாண்டியர் ஆவார்…!!!
பல பகுதிகளில் உள்ள போராளிகளையும் சிற்றரசர்களையும் ஒன்றிணைத்து வீரச்சங்கம் அமைத்து போராடியவர் அவர் மரணத்தின் பிடியில் இருந்த போதும் அவரது விவேகத்தை எண்ணி அஞ்சிய வெள்ளையர்கள் சின்ன மருது பாண்டியரை சிங்கத்தை அடைக்கும் இரும்பு கூண்டிற்குள் அடைத்து சென்று தூக்கிலிட்டான் சுமார் 21 ஆண்டுகள் மருது சீமையான சிவகங்கை சீமையினை நல்லாட்சி செய்த மருதரசர்களின் குருபூஜை விழாவை சிறப்பாக கொண்டாடும் நாம் அவர்கள் பிறந்த தினத்தை நினைவு கூற மறந்துவிட்டோம்…!!!
இனி வருடந்தோறும் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த நாளை ”வீரம் உதித்த தினம்” என்றும் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் பிறந்த நாளை ”விவேகம் உதித்த தினம்” என்றும் கொண்டாடுவோம்…!!!