பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவும் 61வது குருபூஜை விழாவும் கோவையில் பல்வேறு இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு  மருது பேரவை மாத இதழ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மருது பேரவை மாத இதழின் இணை ஆசிரியர்   முத்து பிரின்ஸ் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்செலி செலுத்தினார்.