
நாம் அகமுடையராக ஓரளவிற்கு தனித்து செயல்பட ஆரம்பித்தது 2010 ஆண்டிற்கு பிறகு தான். 2021 ஆண்டிற்கு பிறகே அனைத்து வகையிலும் மிகவும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தோம். தமிழகம் முழுவதும் எண்ணற்ற சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களும் அவரவர் பகுதியில் மிகச்சிறப்பாக மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை நிகழ்வை ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளுடன் பொது நிகழ்வாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதேபோன்று திருப்பத்தூர், காளையார்கோவிலும் பெருந்திரளாக கூடி ஆண்டுதோறும் நமது மாமன்னர்களுக்கு சிறப்பு செய்கிறோம். ஆதலால், நாம் தற்போது தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் தனியாக செயல்பட்டு வருகிறோம்…
நாம் தனித்தனியாக சிறப்புடன் செயல்பட்ட போதிலும், நம்மிடம் பெரியளவில் ஒற்றுமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. நமக்கான தனி அடையாளத்தை நம்மால் ஏற்படுத்த இயலவில்லை. இது ஒரு பெருங்குறையாகவே இன்றளவும் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த குறையை போக்கும் படி நமது அகமுடைய முன்னோடிகள் ஒற்றுமையாக செயல்பட முயற்சி எடுப்பது அகமுடைய இன உணர்வுள்ள அனைவருக்கும் மிகச்சிறந்த ஆனந்தம்.
ஒற்றுமை முயற்சியை எடுக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…
இந்த அசாதாரண முயற்சி எந்த நிலையிலும் தொய்வில்லாமல் செல்ல வேண்டியது அவசியமாகிறது. அதற்காக நாம்,
தமிழகம் முழுவதும் எவ்வளவு சங்கங்கள் உள்ளன அதில் சிறப்பாக செயல்படும் சங்கங்கள் எவை என தெரிந்து அவற்றை முதலில் ஒருங்கிணைத்து மாவட்டம் தோறும் ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். பிறகு, இந்த மாவட்ட குழுக்களை ஒருங்கிணைக்க, மாநிலம் தழுவிய ஒரு ஒருங்கிணைப்பு கமிட்டி ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் சங்கங்களிலிருந்து சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து கிராமம், நகரம், ஒன்றியம், மாவட்டம் என பிரித்து குழுக்களை ஏற்படுத்தினால் அனைத்து நிலைகளிலும் நமக்கான சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். அதன்பிறகு நமக்கான ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி, ஒரு தலைமையை உருவாக்கினால் நிச்சயமாக தமிழக அரசியலில் நம்மால் வெற்றிகரமாக செயல்பட முடியும்…
தமிழக அரசியலில் 2026 ல் மிகப்பெரியளவில் அரசியல் கட்சிகளின் கூட்டணி காட்சிகள் நிச்சயமாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில் அனைத்து நிலைகளிலும் சிறந்த கட்டமைப்புடன் நாம் உருவானால் மட்டுமே நம்மை பெரிய அரசியல் கட்சிகள் திரும்பி பார்க்கும். நாமும் நமக்கான அரசியல் இடத்தை கேட்டு பெறமுடியும். நமது திட்டம், செயல் வடிவம் அனைத்தும் மிகப்பெரிய அளவில் இருந்தால் மட்டுமே நமக்கான இடம் உறுதியாக கிட்டும். மேலும், நமக்குள் இருக்கும் ஆண்ட பரம்பரை என்னும் ஈகோவை விட்டு நாம் அகமுடையர் என்ற ஒற்றுமை உணர்வுடனும், சகோதரத்துடனும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து செயல்பட்டோமானால் 2026 அரசியல் களத்தில் நிச்சயம் நாம் சாதிக்கலாம் என்பதில் எள் அளவும் ஐயமில்லை…
முதல் முயற்சியாக ஒற்றுமையுடன் வென்று காட்ட வருகின்ற 13.10.2024 அன்று சென்னையில் ஒன்றுகூடி அகமுடைய அரசியல் சகாப்தம் படைப்போம்…
வாழ்க மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புகழ்.
வளர்க நமது அகமுடைய ஒற்றுமை உணர்வு.
💐💐💐💐💐💐💐💐💐💐
கும்மிடிப்பூண்டி R.தனசேகரன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏